Uத்ரிஷா ஏன் இந்த முடிவெடுத்தார்?

Published On:

| By Balaji

சமூக தளங்களில ஆக்டிவ்வாக செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் த்ரிஷா. ஒவ்வொரு நாளும் தனது புகைப்படங்களாக இருக்கட்டும், அல்லது சமூகம் தொடர்பான கருத்துகளாக இருக்கட்டும் செல்லப் பிராணிகள் தொடர்பான அப்டேட்டுகளாக இருக்கட்டும் த்ரிஷாவின் பக்கத்தில் ஏதாவது ஒன்று இருக்கும்.

ஆனால் திடீரென நேற்று முன் தினம் இரவு த்ரிஷா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் இருந்த தனது பெரும்பாலான படங்களையும், போஸ்டுகளையும் நீக்கிவிட்டார். இப்போது த்ரிஷாவின் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெறும் 7 பதிவுகளே இருக்கின்றன. என்னாச்சு த்ரிஷாவுக்கு, ஏன் பழைய பொக்கிஷங்களை நீக்கிவிட்டார் என்று இன்ஸ்ட்ராகிராமுக்குள் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்காத குறையாக உச் கொட்டி வருகின்றனர்.

த்ரிஷாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவரை 27 லட்சம் பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள். இத்தனை லட்சம் பேர் தினமும் பார்த்துவரும் தனது இன்ஸ்டா பக்கத்தை த்ரிஷா திடீரென அழித்தது ஏன், ஏதேனும் மன வருத்தத்தில் இருக்கிறாரா… அல்லது அவரது அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டதா என்று ரசிகர்களுக்குள் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதுவரை அதிகாரபூர்வமாக த்ரிஷா இதற்கான காரணம் சொலல்வில்லை? வாயத் தொறங்கம்மா.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share