_எனது மிகச் சிறந்த 19 ஆண்டுகள்: த்ரிஷா

Published On:

| By Balaji

மிஸ் சென்னை பட்டத்தை 1999ஆம் ஆண்டு வென்ற த்ரிஷா, அதே ஆண்டு

பிரசாந்த் – சிம்ரன் நடித்த ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன்பின், 2002ஆம் ஆண்டு அமீர் இயக்குனராக அறிமுகமான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி என முன்னணிக் கதாநாயகர்கள் அனைவருடனும் பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி கடந்த டிசம்பர் 14ஆம் தேதியோடு 19 ஆண்டுகளை நிறைவடைந்து 20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டுப் பலரும் சமூக வலைதளங்களில் த்ரிஷாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறி உள்ளதாவது:

உங்களுக்கு விடுமுறை தேவையில்லாத ஒரு வேலையைப் பெறுங்கள். அதைத்தான் நான் செய்தேன். நான் இன்னும் விடுமுறையில்தான் இருக்கிறேன். இந்தப் பயணத்தில் என்னோடு இருப்பவர்களை எப்போதும் நான் போகவிட மாட்டேன், நான் அனைவராலும்தான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் மிகச்சிறந்த 19 ஆண்டுகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

**இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share