புதுப்பொலிவுடன் தயாராகும் டைட்டானிக்!

Published On:

| By admin

டைட்டானிக் திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் திரையிட தயாராகி வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான படம் ‘டைட்டானிக்’. இந்தப் படம் 1912ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் பயணிகள் சொகுசு கப்பலை அடிப்படையாகக் கொண்டு உருவான படம்.
உலகம் முழுவதும் மொழி கடந்து பிரமாண்ட வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்த படம் டைட்டானிக். இந்தப் படம் 11 ஆஸ்கர் விருதுகளைக் பெற்றது. இதில் காதலர்களாக நடித்த லியார்னாடோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் இருவரும் பெரும் புகழை அடைந்தனர். இதுவரை உலகில் அதிகம் வசூல் சாதனைப் படைத்த படங்கள் ’அவெஞ்சர்: எண்ட்கேம்’, ’அவதார்’ இரண்டு படங்கள். மூன்றாம் இடத்தைப் பிடித்திருப்பது ‘டைட்டானிக்’
தற்போது இந்தப் படம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. படம் வெளியாகி 25 வருடங்கள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்த அறிவிப்பை டைட்டானிக் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் திரையரங்குகளில் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, 2023ஆம் வருடம் காதலர் தினத்தன்று (பிப்ரவரி 14) புதுப்பிக்கப்பட்ட பதிப்பு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel