^கணவருடன் பாடல் பாடும் சரண்யா மோகன்

entertainment

குழந்தை நட்சத்திரமாகத் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி, கதாநாயகியாக வளர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல மொழி சினிமாக்களிலும் கால் பதித்தவர் சரண்யா மோகன்.

தமிழில் அவர் நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’, ‘பஞ்சாமிர்தம்’, ‘யாரடி நீ மோகினி’, ‘வேலாயுதம்’, ‘அ ஆ இ ஈ’ உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. நடிப்புடன் சிறந்த நடன கலைஞராகவும் சரண்யா மோகன் திகழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு அவரது திருமணம் நடைபெற்றது. அரவிந்த் கிருஷ்ணா என்னும் மருத்துவரை மணம் செய்துகொண்ட அவர் திருமணத்திற்குப் பிறகு திரை வாழ்க்கையில் இருந்து விலகி கொண்டார்.

தற்போது டிக் டாக் வழியாக மீண்டும் தனது ரசிகர்களுடன் அவர் இணைந்துள்ளார். டிக் டாக்கில் சரண்யா மோகன் மட்டுமின்றி அவரது கணவரும், குழந்தையும் இணைந்து வீடி��ோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நகைச்சுவை வீடியோக்கள், நடன வீடியோக்கள், நடிப்புத் திறமையை வெளிக் காட்டும் வீடியோக்கள் என்று அவர்கள் ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சரண்யா மோகன் சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து பாடல் பாடிய வீடியோ டிக் டாக்கில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

@saranyamohanofficial

Lockdown evenings with @swami_bropls excuse the mistakes ##goodevening##friends##tamil##tamiltiktok##tamilmuser##saranyamohan#< target="_blank" href="https://www.tiktok.com/tag/swamibro">#swamibro##actresssaranyamohan

♬ original sound – saranyamohanofficial

‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்’ பாடலை சரண்யா மோகன் தனது கணவர் அரவிந்த் உடன் இணைந்து சிறப்பாகப் பாடுகிறார்.

பத்து மணி நேரத்தில் 80,000 பார்வையாளர்களைக் கடந்த இந்த பாடல் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தான் ஒரு நடிகை மட்டுமல்லாமல் சிறந்த பாடகியும் கூட என்பதை சரண்யா மோகன் இதன் மூலம் நிரூபித்துள்ளார்.

**-டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *