நமது மூளையால் ஒரே நேரத்தில் இரண்டு விதமான வேலைகளை செய்ய முடியுமா? முடியும் என்று உணர்த்தியிருக்கிறார் டிக் டாக் பயனாளி ஒருவர்.
டிக் டாக்கில் தற்போது சப்மரெய்ன் கேம் என்னும் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வீடியோ கேம் விளையாட்டு. ஆனால் நமது கைகளைப் பயன்படுத்தாமல், நமது தலையை மேலும் கீழும் அசைத்து அங்கிருக்கும் தூண்களில் தொடாதவாறு இறுதி புள்ளிக்கு சென்றடைய வேண்டும். இது தான் அந்த விளையாட்டு.
இந்த சேலஞ்சை செய்ய பலரும் கடினமாக முயற்சி செய்து வருகின்றனர். பலரும் இதில் வெற்றி கண்டாலும் சிலருக்கு பலமுறை பயிற்சியும் முயற்சியும் தேவைப்படுவதாக இருக்கிறது. அதேபோன்று ரூபிக்ஸ் க்யூப் எனப்படும் விளையாட்டை விளையாட திறமை வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த இரண்டு வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து முடித்திருக்கிறார் அந்த டிக் டாக் பயனாளி.
@kingofcubers ##submarinegame Tap share Button 3 times and play game ##trending ##tik_tok ##rubikcubechallenge ##rubikscube ##rubikscubemagic ##foryoupage ##foryou
ரூபிக்ஸ் க்யூப்பின் நிறங்களை சரிசெய்து கொண்டே மறுபுறம் இந்த கேமையும் விளையாடி முடித்திருக்கிறார். ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
**-டிக் டாக் யூஸர்**�,”