ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் அவரது குடும்பத்துடன் இணைந்து தென்னிந்திய பாடல்களுக்கும், வசனங்களுக்கும் டிக் டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்.
50 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருக்கும் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் முழு நேரமும் இயங்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள், தங்கள் ரசிகர்களுடன் நேரம் செலவிடுவதற்காக யூட்யூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி, தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் வீடியோக்களையும், விழிப்புணர்வு பதிவுகளையும் பதிவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சில தினங்களுக்கு முன்பு ‘புட்ட பொம்மா’ தெலுங்கு பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். ட��க் டாக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ 57 லட்சம் லைக்குகளை பெற்றது.
இந்த நிலையில் தற்போது பாகுபலி திரைப்படத்தில் இடம்பெறும் பிரபல காட்சியை நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
@davidwarner31 What’s the movie everyone?? ##foryoupage ##tiktokindia
போர் வீரர் போன்ற உடை அணிந்து ‘நான்தான் பாகுபலி’ என்று கூறி வார்னர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதே போன்று வார்னர் தனது மனைவியுடன் இணைந்து ‘முக்காலா’ பாடலுக்கு நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
@davidwarner31 Sunday fun day!! ##prabhudeva ##tiktokindia ##fyp ##maqabla @theshilpashetty @candywarner31
விளையாட்டில் மட்டுமின்றி நடிப்பிலும், நடனத்திலும் கூட தனக்கு திறமை இருக்கிறது என்பதை வார்னர் உணர்த்தியுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”