கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மை முன்னெச்சரிக்கையாக நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொள்ள அறுவுறுத்தப்பட்டுள்ளோம்.
அதனை வலியுறுத்தும் விதமாக டிக் டாக்கிலும் பல்வேறு வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் மழலை மொழியில் தனது மாமாவுக்கு அறிவுரை கூறும் குட்டிப்பாப்பாவின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘என்ன அவுட்டிங்கா?’ என்று குட்டி பாப்பா கேட்க, ‘ஆமா, பீச்சுக்குப் போயிட்டு வந்தேன்’ என்று அவர் பதிலளிக்கிறார். அவ்வாறு கூறிக் கொண்டே பாப்பா கையில் வைத்திருக்கும் தின்பண்டம், ‘எனக்கும் ஒன்று’ என்று கூறிக் கொண்டே எடுக்கப் போகிறார். அதற்கு பாப்பா, ‘ஹேண்ட் வாஷ் பண்ணியா’ என்று தனது மழலை மொழியில் அதட்டிக் கேட்கிறார். ‘இவ வேற’ என்று சலிப்புடன் கூறி அமரும் அவரிடம், ‘**மக்கள் கூட்டமா இருக்குற இடத்துக்குப் போகக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா நீ போன. போய்ட்டு வந்து கையாச்சும் கழுவலாம் இல்லே**’ என்று கருத்தாகக் கேட்கிறார்.
‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு’ என்று பதில் கேள்வியை அவர் கேட்க, ‘**சம்மந்தம் இருக்கு. நீ அங்க இருந்து வந்து ஸ்வீட்ல கை வைப்ப. உனக்கும் நோய் வரும். எனக்கும் நோய் வரும். அப்புறம் மத்தவங்கள குறை சொல்லி என்ன பிரயோஜனம் இருக்கு? இனிமே வெளியே போய்ட்டு வந்து கை கழுவிட்டு தான் சாப்பிடணும்**’ என்று தனக்கே உரிய பாணியில் குட்டி பாப்பா அதட்டியபடியே அறிவுரை கூறுகிறார்.
அதையும் தாண்டி, ‘ஒன்னே ஒன்னு’ என்று கூறிக்கொண்டே தின்பண்டத்தில் கை வைக்க வருபவரை, ‘போடாண்ட்றேன்….’ என்றபடியே தள்ளிவிடுகிறார். இந்த வீடியோ பார்த்தவர்களில் சிலர், ‘என்ன குழந்தை பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் பேசுகிறதே?’ என்று கமென்ட்டில் கேட்க, ‘தனக்கும் கேடு விளைவித்து அடுத்தவங்களுக்கும் ஆபத்து வர வைப்பவர்களுக்கு மரியாதை கிடைக்காமல் தான் போகும்’ என பலரும் பதிலளித்துள்ளனர்.
@wilspat Aprum evolo venum na kotiko 😝❤️ ##niece ##comedy ##15svines ##edutok ##gopop ##trending ##tiktok
‘சுத்தமாக இருக்க வேண்டும். கைகளைக் கழுவ வேண்டும்’ என்றெல்லாம் அரசும், சுகாதார அமைப்புகளும் அறிவுறுத்துவதன் அவசியம் பலருக்கும் புரியாமல் போகிறது. இத்தகைய எளிய வீடியோக்கள் அறிவுறுத்தலாக மட்டுமின்றி நாளைக்கான நினைவூட்டலாகவும் உள்ளது.
நாமும் கைகளை சுத்தமாகக் கழுவலாமே. டிக் டாக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஹேண்ட் வாஷ் சேலஞ்சில் நான் பங்கேற்றுவிட்டேன். உங்கள் ஹேண்ட் வாஷ் வீடியோக்கள் எப்போது பதிவேற்றப்படும்?
**டிக் டாக் யூஸர்**
�,”