உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழங்களை உட்கொள்ள வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு விதமான சுவையும், குணமும் மறைந்திருக்கிறது. ஆனால் சாத்துக்குடி, மாதுளை, பலா போன்ற பழங்களின் சுவை நமக்கு பிடித்திருந்தாலும் அதனை தோல் உரித்து எடுத்து சாப்பிடுவது சற்று சிரமமானது.
அதிலும் சாத்துக்குடி பழத்தை ஆரஞ்சு சுளை போல சாப்பிட வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் சிரமம் காரணமாக கடைசியில் ஜூஸாக மட்டுமே குடிக்க முடிகிறது.
அந்த விதத்தில் சாத்துக்குடி பழத்தை எளிமையாக தோல் உரித்து எடுப்பதற்கு ஒரு புதிய வழியை டிக் டாக் பயனாளி ஒருவர் வீடியோ மூலம் விளக்கியுள்ளார்.
தமிழில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் டிக் டாக் குடும்பங்களில் ஒன்றான இவர்கள் வித்தியாசமான வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தனர். இந்த வகையில் சாத்துக்குடி உரிப்பதற்கு இவர்கள் விளக்கிய டெக்னிக்கும் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
@kannanbhagavathy Fruit cut hacks???? Eat raw fruits stay healthy ##lifehacks ##quarantinelife
முதலில் எலுமிச்சை நறுக்குவதைப் போன்று சாத்துக்குடியை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதில் ஒன்றின் அடி பாகத்தை மட்டும் வெட்டி எடுத்துவிட்டால் மீதமிருக்கும் பழத்தின் தோலை எளிதில் நீக்கி விட முடியும்.
பழத்தை வெட்டி எடுப்பது இத்தனை எளிமையானதா என்று பலரையும் சிந்திக்க வைக்கிறது இந்த வீடியோ. அனைவரது கவனத்தையும் ஈர்த்த இந்த டிக் டாக் வீடியோ லட்சக்கணக்காண பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
**-டிக் டாக் யூஸர்**�,”