சாதாரணமாக, அசாத்தியம் என்று தோன்றுகின்ற பல விஷயங்களையும் அறிவியலின் உதவியுடன் நம்மால் சாத்தியப்படுத்த இயலும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளைப் போன்றே சில அறிவியல் நுணுக்கங்களும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. இவற்றைக் குறித்தும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
நடிப்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் மட்டுமின்றி கல்வி கற்பதற்கும் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தலாம் என்பதை அவ்வாறு வீடியோக்கள் பதிவேற்றி சிலர் உணர்த்தி வருகின்றனர். அத்தகைய வீடியோக்களில் ஒன்று நமக்கு அதிக சுவாரஸ்யத்தை தருவதாக இருக்கிறது.
‘விரல் அளவு நீளம் உடைய பெரிய ஆணியை நிறுத்தி வைத்து அதன் மீது மற்றொரு ஆணியை வைக்க முடியுமா?’ என்று கேட்டால் பலரும் ‘முடியும்’ என்று கூறுவார்கள். ‘அதே வகையில் ஒரு ஆணியின் மீது ஒரே நேரத்தில் 10 ஆணிகளை வைக்க முடியுமா?’ என்ற��� கேட்டால் பலரது பதிலும் ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்கும்.
ஆனால் அதுவும் இயலும் என்று அறிவியலின் துணையுடன் நிரூபித்திருக்கிறார் டிக் டாக் திறமையாளர் ஒருவர். அதற்காக முதலில் ஆணி ஒன்றை தரையில் அறைந்து நிறுத்தி வைக்கிறார்.
@rickylax Nail balance.
10 ஆணிகளை அந்த ஒரே அணியின் மீது வைக்க, முதலில் அவற்றில் ஒன்றை எடுத்து தரையில் படுக்க வைக்கிறார். மீதம் இருக்கும் ஆணிகளை எடுத்து அவற்றின் தட்டையான தலை பாகம் மேலே இருக்குமாறு படுக்க வைக்கப்பட்டுள்ள ஆணியின் மீது எதிரும் புதிருமாக அடுக்கி வைக்கிறார். அவ்வாறு 8 ஆணிகளை வைத்து மீதமிருக்கும் மற்றொரு ஆணியை எதிரும் புதிருமாக வைக்கப்பட்டுள்ள ஆணிகளின் மீது அடியிலிருக்கும் ஆணிக்கு எதிர் திசையில் வைக்கிறார்.
இதே வழிமுறையைப் பின்பற்றினால் மிக எளிமையாக பத்து ஆணிகளையும் ஒரே நேரத்தில் நம்மால் எடுக்க முடியும். எதிரும் புதிருமாக வைக்கப்பட்டுள்ள ஆணிகள் ஒன்றுக்கு ஒன்று எடையை சமன் செய்து விடுவதால் அவற்றை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒரே ஆணியின் மீது வைத்தாலும் அவை கீழே விழாமல் இருக்கும். இது குறித்த டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது.
ஒரே நாளில் 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோ நான்காயிரத்துக்கும் அதிகமானவர்களால் பகிரப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”