wடிக் டாக்: நாய்க்கு நகம் வெட்ட சூப்பர் ஐடியா!

entertainment

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சுத்தம் செய்வதற்கு மிகப் பெரிய போராட்டமே நடத்த வேண்டியதாக இருக்கும்.

குளிப்பாட்டுவது கூட ஓரளவுக்கு நம்மால் செய்துவிட முடியும். ஆனால் நம் வீட்டு செல்லப்பிராணிகளான நாய், பூனைகளின் நகங்களை வெட்டி எடுப்பது அத்தனை சுலபமானது அல்ல. ஆனால், அவ்வாறு நாம் நகம் வெட்டாமல் விட்டு விட்டால் ஆபத்தும் நமக்கு தான்.

தன்னை வளர்ப்பவர் தனக்கு நகம் வெட்ட வருவதைப் பார்த்து நாய்கள் ஓடி ஒளிவதும், மயக்கம் போடுவதாக நடிப்பதுமான சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாவதைப் பார்த்திருப்போம். அவ்வாறு சேட்டை மிக்க தனது செல்ல நாய்க்கு நகம் வெட்ட நல்லதொரு வழியைக் கண்டறிந்துள்ளார் ஆண்டனி மோரிசன் என்பவர்.

இதற்காக முதலில் பிளாஸ்டிக் கவரை எடுத்து தனது நெற்றியில் சுற்றிக் கட்டிக் கொள்கிறார். பின்னர் அதன் மேற்புறத்தில் அவரது நாய்க்கு மிகவும் பிடித்த பீனட் பட்டரைத் தடவுகிறார்.

@_anthonymorrison

Desperate times call for desperate measures. ##foryou ##foryoupage ##fyp ##dog

♬ Rocky: Eye of the Tiger – Best Movie Soundtracks

நாயின் காலைக் கையில் பிடித்து ஆண்டனி நகம் வெட்டுகிறார். பீனட் பட்டரை சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் மெய்மறந்த நாய்க்குட்டியும் அமைதியாக இருக்கிறது. வெற்றிகரமாக நகம் வெட்டி முடிக்கிறார்.

இது தொடர்பாக டிக் டாக்கில் அவர் பதிவேற்றியுள்ள வீடியோ அனைவரையும் சிரிக்கவும், ரசிக்கவும் வைத்துள்ளது.

**-டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *