டிக் டாக்: முதுகு வலியை விரட்ட எளிய உடற்பயிற்சி!

entertainment

ஊரடங்கு ஆரம்பித்தத்தில் இருந்து நம்மில் பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறோம்.

அலுவலகத்தில் சரியான இருக்கையில் அமர்ந்து டேபிளில் இருக்கும் மடிக்கணியை இயக்கி வேலை செய்தாலே உடல்வலி, முதுகுவலி போன்ற சிரமங்களைத் தவிர்க்க முடியாது. அதிலும் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்யும் போது அத்தகைய இருக்கைகள் பலரது வீட்டிலும் இருப்பது இல்லை.

அதனாலேயே பல மணி நேரம் உட்கார்ந்த படி வேலை செய்வதால் கடும் முதுகுவலியால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். அவ்வாறு இன்னல் தரும் முதுகு வலியில் இருந்து மீண்டு வர எளிய உடற்பயிற்சி குறித்து மருத்துவர் ஒருவர் டிக் டாக்கில் வீடியோ ஒற்றைப் பதிவேற்றியுள்ளார்.

@dr.cracks

Stretch For Lower Back Pain Relief ##chiropractor ##chiropractic ##satisfying ##educational ##advice ##lowbackpain ##backpain ##helpful ##helpfultips ##fyp ##fy

♬ original sound – nopainmoregains

அதற்காக ஒரு படுக்கையில் முதுகு மட்டும் தரையில் படுமாறு தலையை மேலெழும்பிப் படுக்க வேண்டும். வலது கால் பாதத்தின் மேற்பகுதி இடது கால் முட்டியில் படுமாறு எடுத்து வைக்க வேண்டும். பின்னர் அதே இடது கால் தொடையின் பின்புறத்தில் வலது கையால் பிடித்து முப்பது நொடிகள் அசையாமல் இருக்க வேண்டும்.

இதே முறையை மறு காலிற்கும் செய்ய வேண்டும். இந்த வீடியோவை டிக் டாக்கில் பார்த்த பலரும் தங்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக கமென்ட்டில் கூறி வருகின்றனர். தங்கள் வலியை விரட்ட எளிய வழியைக் காண்பித்த மருத்துவருக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டிலேயே இருந்து வேலை செய்தாலும் வேலையிலும், ஆரோக்கியத்திலும் ஒரே நேரத்தில் அதிக கவனம் செலுத்துவோம்.

**-டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *