~எல்லாமே தந்திரம் தானா? மேஜிக்கும் பின்னணியும்!

Published On:

| By Balaji

வெள்ளைத் தாளை எரிய விட்டு அதை புறாவாக மாற்றுவதும், காலியான கறுப்புத் தொப்பிக்குள் கையை விட்டு குட்டி முயலை வெளியே எடுப்பதுமான மாயாஜால வித்தைகளைக் கண்டு நாம் பலமுறை வியந்திருப்போம்.

இவற்றின் பின்னணியில் இருப்பது மந்திரமா? அல்லது தந்திரமா? என்று பல நேரங்களிலும் யோசித்திருப்போம். மேஜிக்குகளின் உண்மை பின்னணி குறித்து ஏராளமான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அந்த வகையில் பிரபல மேஜிக் ஒன்றின் பின்னணி குறித்து டிக் டாக் தளத்தில் வீடியோ ஒன்று பதிவேற்றப் பட்டுள்ளது.

மாய வித்தை காட்டும் நபர், ஒரு இரும்பு மேடையில் ஏறி நின்று தனது உதவியாளரின் உதவியுடன் உடல் முழுவதையும் கயிற்றால் இறுக்க கட்டிக் கொள்கிறார். அவரது உதவியாளர் கறுப்பு துணியால் அவரை மறைத்ததும் மாயவித்தைக் காரர் ஒரே நொடியில் விடுபட்டு வந்து விடுகிறார். அவர��க் கட்டி வைத்த இடத்தில் இப்போது உதவியாளர் இருப்பார்.

நம் கண்களால் நம்ப இயலாத இந்த மாயாஜாலம் அனைவரையும் வியக்க வைக்க நம்மை அறியாமல் கைதட்டி விடுவோம். இது எவ்வாறு சாத்தியமானது என்று பலமுறை சிந்தித்திருப்போம்.

@thaygiao03

Lòng tin đã mấy khi xem xong clip này ##aothuat ##funny ##giaimaaothuat

♬ nhạc nền – Cười Xỉu

இதன் பின்னணி குறித்த வீடியோ தான் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலில் அந்த கயிறு அவரை சுற்றி கட்டப்படவில்லை. இரண்டாவதாக அந்த இரும்பு மேடையில் கதவு ஒன்று இருக்கிறது. உதவியாளர் கறுப்பு துணியால் மறைத்தது���், மாய வித்தைக் காரர் கதவைத் திறந்து வெளியே வருகிறார். அதே கதவு வழியாக உதவியாளர் உள்ளே சென்றதும் துணி நீக்கப்படுகிறது. நாமும் என்ன நடந்தது என்று தெரியாமல் வியந்து விடுகிறோம்.

டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டிருக்கும் இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது. என்ன வித்தையாக இருந்தாலும், அதனை முறையான பயிற்சியுடன் வெற்றிகரமாக மேடையில் அரங்கேற்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும் மேஜிக் கலைஞர்களுக்கு அனைவரும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share