சாதாரண மனிதர்களையும் சாதனையாளர்களாக மாற்ற இன்றைய சமூக வலைதளங்கள் பெருமளவு உதவி புரிந்து வருகின்றன.
‘ஒரு திரைப்படத்தின் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட முடியாதா?’ என்ற ஏக்கத்தில் பல நாட்கள் பல இடங்களில் வாய்ப்புகளுக்காக கால் கடுக்க காத்திருந்த காலம் காணாமல் போய்விட்டது. திறமையும், முயற்சியும் கொண்ட பலருக்கும் இப்போது வாய்ப்புகள் வீடு தேடி வந்து கொண்டிருக்கின்றன.
மியூசிக்கலி, டிக் டாக் போன்ற தளங்களில் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய பலருக்கும் பிரபல இயக்குநர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாகும் வாய்ப்புகள் கூடக் கிடைத்துள்ளது. உதாரணமாக மிருனாளினி, வர்ஷா பொல்லம்மா போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதிலும் அச்சு அசலாக விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்று இருக்கும் சில டிக் டாக் திறமையாளர்கள் நம்மை பல நேரங்களில் வியக்க வைக்கின்றனர்.
சில நேரங்களில் அவர்களது உருவ ஒற்றுமையும் முகபாவனைகளும் நமது கண்களால் நம்ப முடியாத அளவிற்கு துல்லியமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது அனைவரையும் அதிர வைத்திருக்கிறார் நயன்தாராவைப் போன்ற முக அமைப்புடன் இருக்கும் இளம் பெண் ஒருவர்.
@miitthuuzz IPC 376????…puthiyaniyamam ##nayanthara
நயன்தாரா நடித்த பிரபல காட்சி ஒன்றை அதே மேக்கப் உடன் நடித்துக் காட்டி அனைவரையும் அவர் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் ஆச்சரியத்துடன் பகிரப்பட்டு வருகிறது.
@miitthuuzz Highly Requested Video…????❤️???? ##nayanthara
உண்மையாகவே நயன்தாரா தான் அந்த வீடியோவில் நடித்து இருக்கிறாரா என்றும் கூட சிலர் கமென்ட் பகுதியில் கேட்டு வருகின்றனர். விரைவில் கதாநாயகி ஆகும் வாய்ப்பு இந்த டிக் டாக் நயன்தாராவுக்கும் வீடு தேடி வரும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”