இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்துக்காக வருமானம் ஈட்டுவதை வீட்டில் கணவன், மனைவி இருவரும் பகிர்ந்து கொள்வதைப் போன்று வீட்டு வேலைகளையும் இன்றைய தலைமுறையினர் புரிதலுடன் பகிர்ந்து கொள்கின்றனர். எனவே தான் சமையல் வேலை மற்றும் பிற வீட்டு வேலைகளை இனிமேலும் இல்லத்தரசிகளுக்கானது என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது.
அவ்வாறு வீட்டில் சமையல் செய்து வைத்துவிட்டு வேலைக்கு செல்லும் பலருக்கும் காலையில் காய்கறிகளை நறுக்கி எடுப்பது சற்று சிரமமான வேலையாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக பூண்டு உரிப்பது, இஞ்சியின் தோலை நீக்குவது, மிளகாயின் மேல் பாகத்தை வெட்டுவது போன்ற வேலைகளுக்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியது இருக்கும். அது மட்டுமின்றி இத்தகைய காய்கறிகளை நறுக்கும் போது கைகள் எரிச்சலடைவதற்கான வாய்ப்பும் இருக்கும்.
அவ்வாறான சிரமங்கள் இல்லாமல் எளிமையாக காய்கறிகளை நறுக்க புதிய உத்தி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
@cooltoolsc wow ##homegoods ##familytime ##stayathome ##storagehacks ##fyp##goodideas ##lifeskills ##smartlifes ##multifunction
அதன் படி விரலில் அணியும் சிறிய ரப்பர் உறையின் ஓரத்தில் கூர்மையான கத்தி போன்ற அமைப்பு பொருத்தப் பட்டுள்ளது. கட்டை விரலில் அதனைப் பொருத்திக் கொண்டு, மற்ற விரலிலும் ரப்பர் உறையை அணிந்து மிக எளிதாக மேலே கூறிய காய்கறிகளை நறுக்கி விடலாம்.
நமது வேலையை மேலும் எளிமையாக்கும் இந்த பொருள் எங்கே கிடைக்கும் என்று பலரும் கேட்டு வருகின்றனர். அனைவரையும் கவர்ந்த இந்த வீடியோ பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”