டிக் டாக் தளத்தில் திறமைகளை வெளிக்காட்டும் வீடியோக்கள் மட்டுமின்றி உணர்வுப்பூர்வமான சில வீடியோக்களும் பலராலும் பதிவேற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது டிக் டாக் ட்ரெண்டிங்காக மாறியுள்ள ‘டோண்ட் ஈட் சேலஞ்ச்’ வீடியோவில் இடம்பெற்ற ஒரு சிறு குழந்தை அனைவரது மனதையும் கொள்ளையடித்துள்ளது. வீடியோ ஆரம்பிக்கும் போதே, குட்டி தேவதை போன்று வெள்ளை நிற உடையணிந்து அமர்ந்திருக்கும் அந்தக் குழந்தை தனது புன்சிரிப்பால் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.
பெற்றோர், தான் மிகவும் விரும்பும் சாக்லேட்டை கையில் எடுத்து வருவதைக் கண்டதும் தனது உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால், அந்த இனிப்பை குழந்தையின் கையில் கொடுக்காமல் கீழே வைத்துவிட்டு அவரது தாய், ‘இதனைத் தொடாதே’என்று கூறுகிறார். இதனைக் கேட்டதும் அந்த குழந்தை செய்வதறியாது திகைத்துப் போகிறார்.
நானும், அப்பாவும் வரும் வரை இதனைத் தொடக் கூடாது” என்று குழந்தையிடம் கூறிவிட்டு பெற்றோர் செல்கின்றனர். அவர்கள் சென்ற பின்னர் கையருகே இருக்கும் அந்த இனிப்பை வாயில் எச்சில் ஊற ஏக்கமாக அந்தக் குழந்தை பார்க்கிறது.
ஒவ்வொரு முறை அதை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போதும், ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் சாக்லேட்டின் அருகே வைத்திருந்த கைகளை மேஜையின் கீழே மாற்றி வைக்கிறார்.
@lynnielondon
மிகவும் விரும்பும் உணவுப் பொருளாக இருந்தும் கூட ,’நாங்கள் வந்த பின்னர் தான் சாப்பிட வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டு அப்படியே நிறைவேற்றிய குழந்தையின் நேர்மை அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சாக்லேட் கையில் கிடைத்ததும், மழலை மொழியில் அவர் நன்றி கூறுவதும் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. டிக் டாக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”