xஊபர்: ஊழியர்களின் மகிழ்ச்சியும், ஏமாற்றமும்!

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து டாக்ஸி ஓட்டுநர்களைப் பாதுகாக்கும் விதமாக ஊபர் நிறுவனம் கையாண்டிருக்கும் புதிய முயற்சி பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

ஆனால், அதே நேரத்தில் நிறுவனத்தின் அதிரடியான ஆட்குறைப்பு நடவடிக்கை ஏராளமான ஊழியர்களைக் கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா வைரஸின் பிடியில் சிக்காமல் இருக்க கடந்த இரு மாதங்களாக உலக மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. பழைய இயல்பு வாழ்க்கையை நாம் மீட்டெடுக்க இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி, பொது மக்கள் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

எனினும் அரசு அறிவித்த சில தளர்வுகளின் அடிப்படையில் சில நிறுவனங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. அதன்படி மீண்டும் இயங்க ஆரம்பித்து���்ள ஊபர் நிறுவனம் தனது நிறுவன ஓட்டுநர்களின் நலன் கருதி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி வாகனம் ஓட்டுபவருக்கும், பயணிக்கும் இடையே எந்த விதமான தொடுதலும், தொடர்பும் இல்லாத வகையில் ஓட்டுநரின் இருக்கையை சுற்றி வைரஸ் தொற்று பரவாத வகையில் பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர்.

அதன் மீது ‘தயவுசெய்து தொடாதீர்கள்’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

@iamshubhradixit

Protection provided for über drivers…great Initiative…well done ????????????????##foryou ##uber ##coronavarious

♬ Myself – Bazzi

ஊபர் நிறுவனத்தின் இந��த புதிய முயற்சிக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் ஊபர் நிறுவனத்தின் திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்பாராமல் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக, ஒரே நேரத்தில் தனது 3700 ஊழியர்களை ஊபர் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. அதிலும் முறையாகத் தகவல் அளிக்காமல் ஜூம் ஆப்பின்(Zoom App) மூலம் மூன்று நிமிடத்திற்கும் குறைவான வீடியோ காலில் இந்த அறிவிப்பைத் தெரிவித்துள்ளது. நெருக்கடியான நேரத்தில் நிறுவனம் எடுத்திருக்கும் இந்த முடிவு ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

பெரும் நிறுவனங்களே பொருளாதார நெருக்கடியை சமாளிக்கத் தடுமாறும் நிலையில், கொரோனா வைரஸ் ஏராளமான ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”