லாக் டவுன் காலகட்டம் ஆரம்பித்ததற்குப் பிறகு கொரோனாவைப் போன்று வேறு சில விஷயங்களும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆனது.
அதில் டிக் டாக் வழியாக பிற சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு, பேசப்பட்ட ஒன்று பாட்டில் ஆர்ட். உபயோகம் முடிந்து வீணாக குப்பையில் எறியப்பட்ட கண்ணாடி பாட்டில்களை சேகரித்து, அதை சுத்தம் செய்து, அழகுபடுத்தி தங்கள் கற்பனை மிக்க கலை வண்ணத்தை சிலர் அதில் காட்டத் தொடங்கினர்.
யாருக்கும் பயனில்லாமல் குப்பையில் எறியப்பட்டு, மட்கிப் போகாமல் மண்ணையும் பாதிக்கும் கண்ணாடி பாட்டில்களையும் பயனுள்ள வகையில் அலங்காரப் பொருளாக மாற்றும் இந்த பாட்டில் ஆர்ட்டை பலரும் விரும்பிச் செய்ய தொடங்கினர். இது குறித்த ஏராளமான வீடியோக்கள் டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
@artist_shalu ##bottleart ##bottlepainting please Support ????????#a#rtlover #b#ottle #b#ottleartist #d#ute #t#randing #t#iktok #L#ifebuoyKarona
இதை செய்யும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைக்கு ஏற்ப பலவித புதுமைகளையும் இதில் செய்து வந்தனர். இதற்காக முதலில் கண்ணாடி பாட்டில் ஒன்றை சுத்தம் செய்து காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சில கண்ணாடி பாட்டில்களின் மேற்புறத்தில் சாதாரணமாகவே வண்ணம் பூச இயலும். அவ்வாறு முடியவில்லை என்றால் டிஷ்யூ பேப்பரில் பசையைத் தடவி அந்த கண்ணாடி பாட்டிலின் மீது ஒட்டி காய வைத்து எடுத்தால் பெயிண்ட் செய்ய இயலும். அவ்வாறு ஏதேனும் ஒரு விதத்தில் அதற்கு விரும்பும் வண்ணம் அளிக்கலாம்.
@ammuliji25 ##mypuzzle ##painting ##bottleart ##artist ##artwork ##myartwork ##bottle ##artist plz support bottle art ishtam ????????✍????????
பாட்டிலை மேலும் அழகுபடுத்த குப்பையாகத் தள்ளப்படும் பிஸ்தா ஓடுகள், முட்டை ஓடு, நியூஸ் பேப்பர், தேவையற்ற சிடிக்கள், உடைந்த கண்ணாடித்துண்டுகள், க்ளே என ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி விரும்பும் விதத்தில் அழகு படுத்தலாம்.
பொழுது போக்காக இதை செய்யத் தொடங்கி தங்கள் வீடுகளை அழகுபடுத்திய பலரும், அவற்றை பிறருக்கும் தந்து வருமானமாகவும் மாற்றியுள்ளார். தன்னம்பிக்கையும் கொஞ்சம் கிரியேட்டிவிட்டியும் இருந்தால் எந்த குப்பையையும் காசாக்கலாம் என்று இந்த பாட்டில் கலைஞர்கள் உணர்த்தி வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”