lடிக் டாக்: நிழலையும் ஃபோட்டோ எடுக்கலாம்!

entertainment

தேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் எடுத்த வித்யாசமான சில ஃபோட்டோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கும்.

அசாதாரணம் என்று நாம் நினைக்கும் பலவற்றையும் அவர்கள் சாதாரணம் என தங்கள் கேமரா கண்களின் மூலமாகப் படம்பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதைப் பார்த்திருப்போம். ஓய்வு நேரத்தை செலவிடும் வழியாக, வருமானத்தின் பாதையாக, தீரா விருப்பத்தின் அடிப்படையாக எனப் பலரும் புகைப்படம் எடுப்பதை விரும்புகின்றனர்.

அத்தகைய கேமரா காதலர்களுக்கு புதிய சில டெக்னிக்குகளை டிக் டாக் வீடியோக்கள் மூலம் சிலர் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் நிழலைப் புகைப்படம் எடுப்பது எப்படி என்பது குறித்து ஒருவர் பதிவேற்றி இருக்கும் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கர்ப்பிணியாக இல்லாத ஒரு பெண் துணியை சுற்றி வயிற்றில் வைத்துக்கொண்டு உள்ளார். அவரது நிழலை ஃபோட���டோ எடுக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணி போல காட்சியளிக்கிறது. செருப்பை தரையில் வைத்து அதன் அருகே காலின் நிழல் வருமாறு சற்று தள்ளி வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

@thecooph

1️⃣, 2️⃣ or 3️⃣ what’s your favorite? 👇 ##photography ##creativeideas ##tutorial ##howto ##creativephototricks

♬ Hate Me – Ellie Goulding & Juice WRLD

இந்த வீடியோவைப் பார்க்கும் போது, நம்மை வியப்பில் ஆழ்த்திய இத்தகைய புகைப்படங்கள் இவ்வளவு எளிமையாக எடுக்க முடியுமா என்று பலருக்கும் தோன்றுகிறது. ஆனால் நாம் எண்ணுவது போன்று அத்த��ை எளிமையானது அல்ல.

முயற்சியும், பயிற்சியும் சற்று கிரியேட்டிவிட்டியும் இருந்தால் நிச்சயம், இது போன்ற புகைப்படங்களை எடுத்து நாமும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தலாம்.

**-டிக் டாக் யூஸர்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *