குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே விளையாட்டு, கல்வி என்று ஏதேனும் ஒன்றின் மீது ஆர்வம் ஏற்பட்டு விடுகிறது. அந்த ஆர்வத்தைக் கண்டறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அளித்தால் மிகப்பெரிய உயரங்களில் அவர்களை கொண்டு சேர்க்க இயலும்.
அந்த வகையில் ஆராத்யா என்னும் சிறுவனுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் மிகுதி என்பதை அவரது குடும்பத்தினர் கண்டறிந்திருக்கிறார்கள். குழந்தை விளையாடட்டும் என்று வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் மட்டையில் அவர் தனது அசாத்திய திறமையை காட்டி அனைவரையும் வியக்க வைத்திருக்கிறார்.
இது தொடர்பான வீடியோ டிக் டாக்கிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
@aaradhya2680 cricket lover Aaradhya ????♥️##ShareTheCare ##agariboy ##tik_tok_india ##cricket ##new_trending ##doubleexposure ##foryou ##cring
கிரிக்கெட் மட்டை அளவிற்குக் கூட உயரமில்லாத இந்த சிறு குழந்தை, பாய்ந்து வரும் பந்துகள் ஒவ்வொன்றையும் கண்காணாத தூரத்தில் அடித்து வீசுவது அனைவரையும் வியக்க வைக்கிறது. நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க மீண்டும் ஒரு சச்சின் கிடைத்து விட்டார் என்றும், தோனி கிடைத்து விட்டார் என்றும் பலரும் ஆராத்யாவின் வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளதுடன் தங்கள் பாராட்டு வார்த்தைகளால் குழந்தைக்கு ஊக்கமும் அளித்து வருகின்றனர்.
44 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட ஆராத்யாவின் வீடியோ 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளிக் குவித்திருக்கிறது. டிக் டாக் மட்டுமின்றி ஃபேஸ்புக், யூட்யூப், ட்விட்டர் போன்ற தளங்களிலும் அவரது வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”