40 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே இருக்கும் நம்மில் பலருக்கும் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்வது என்ற குழப்பம் இருக்கும்.
லாக்டவுன் முடிந்து வெளியே செல்லும் போது வேலை இருக்குமா? வருமானம் கிடைக்குமா? எதிர்காலம் என்னவாகும்? என்று பல்வேறு குழப்பங்களும் பலருக்கும் இருக்கிறது. அதை விட வெளியில் சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமா என்ற அச்சமும் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது.
நாளைய தினத்தைக் குறித்த கவலையில் இன்றைய நாளை பலரும் இழந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான நம்மில் பலருக்கும் நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது, டிக்டாக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்று.
ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், வயதின் முதிர்ச்சியால் நேராக நிற்க கூட முடியாத சில பாட்டிகள் இணைந்து மகிழ்ச்சியுடன் நடனமாடுவதாக அந்த வீடியோ உள்ளது.
குழந்தைகளால் கைவிடப்பட்டும், சாலைகளில் தனித்து விடப்பட்டும் அனாதையாக்கப்பட்ட ஏராளமான முதியவர்கள் இங்கு வசித்து வருகின்றனர். அந்த டிக் டாக் பக்கத்தில் அவர்கள் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர்.
@dadima1940
எதிர்காலத்தை நினைத்த கவலையில் சிக்கித் தவிக்காமல் இன்றைய மகிழ்ச்சிக்கான பாதையை நாம் தேட வேண்டும் என்பதை அவர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள். எந்தவித கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் அவர்கள் நடனமாடுவது நம்மிலும் நம்பிக்கையை நிறைக்கிறது.
டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ள இந்த வீடியோ பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான லைக்குகளையும் பெற்றுள்ளது.
**-டிக் டாக் யூஸர்**�,”