திரெளபதி பட கதாநாயகி ஷீலாவின் டிக் டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
நடன ஆசிரியையான ஷீலா ராஜ்குமாருக்கு அவர் நடித்த மேடை நாடகங்கள் வழியாக சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது.
2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஆறாது சினம்’ திரைப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அவர், ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் வெளியான ‘டு-லெட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். டு-லெட், மனுஷங்கடா கும்பளங்கி நைட்ஸ் போன்ற திரைப்படங்களில் ஷீலாவின் நடிப்பு கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த வருட துவக்கத்தில் மோகன்.ஜி இயக்கத்தில் வெளியான ‘திரௌபதி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அவர் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்திய இந்த திரைப்படத்தில் ஷீலாவின் நடிப்பும் அதிகம் பேசப்பட்டது. கிரெளவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்��ப்பட்ட திரௌபதி திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்திருந்தார்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூலில் ‘திரௌபதி’ திரைப்படம் சாதனை புரிந்தது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வீட்டிலேயே இருக்கும் ஷீலா டிக் டாக்கில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
@sheelaactress always be happy☺????##sheela ##actress ##besmile ##bepostive ##lookbook ##tiktokindia ##tiktok ##expressions
பிரபல வசனங்களுக்கும், பாடல்களுக்கும் அவர் நடித்து வீடியோ வெளியிடுவது டிக் டாக் திறமையாளர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டி.ராஜேந்தரின் பிரபல வசனத்தை நடித்து வீடியோவாக அவர் வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் ஏராளமான லைக்குகளைப் பெற்றுள்ளது.
@sheelaactress Any TR sir fan☺????##sheela ##actress ##tiktok ##tiktokindia ##stayhomestaysafe ##besmile ##lookbook ##duetwithme ##expressions
3 லட்சத்துக்கும் அதிகமானவர்களால் டிக் டாக்கில் பின் தொடரப்படும் ஷீலாவுக்கு இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. அவர் நடித்து வெளியிடும் வீடியோக்களுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”