cபாடகராக அறிமுகமாகும் துருவ் விக்ரம்

Published On:

| By admin

விக்ரம் நடிப்பில் உருவான ‘மகான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மிஸ்ஸிங் மீ’ எனத் தொடங்கும் ராப் பாடலை பாடி, நடிகர் துருவ் விக்ரம் பாடகராக அறிமுகமாகிறார் என தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகான் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் தமிழ் சினிமாவில் வணிக ரீதியாகவும், படைப்பு அடிப்படையிலும் முக்கியமான திரைப்படமாக பார்வையாளர்களாலும், சினிமா விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டு வருகிறது. விக்ரம் நடித்துள்ள 60வது படம் என்பதுடன், இந்தப் படத்தில் அவருடைய மகனும், நடிகருமான துருவ் விக்ரமுடன் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கிறார் என்பது கூடுதலான கவனத்தை சினிமா வியாபார வட்டாரத்தில் ஏற்படுத்தியது. கொரோனா பொது முடக்கம் காரணமாக புதியபடங்களை வெளியிட முடியாமல் தேங்கி இருக்கும் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களுடன் போட்டியிடாமல் ஓடிடியில் மகான் படத்தை வெளியிட முடிவு எடுத்தது தயாரிப்பு நிறுவனம். இந்த திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் நாளை (பிப்ரவரி 10) உலகளவில் வெளியாகிறது. இதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் துருவ் விக்ரம் முதன்முதலாக சொந்த குரலில் பாடிய ‘மிஸ்ஸிங் மீ’ எனத் தொடங்கும் ராப் பாடல் வெளியாகிறது. துள்ளலான நடனத்துடன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகி இருக்கும் ‘மிஸ்ஸிங் மீ.’ என்ற பாடலை பாடலாசிரியர் விவேக்குடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

மகான்’ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ‘விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா மற்றும் சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாகிறது. கன்னடத்தில் இந்த படத்திற்கு ‘மகா புருஷா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
[‘மிஸ்ஸிங் மீ.’](https://www.youtube.com/watch?v=G5ur_C-L7ZU)

**அம்பலவாணன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share