Tகுளிர்ச்சியும், ஈரப்பதமான சூழலும் கொண்ட குளிர்காலத்தில் ஈரப்பதமான காற்றை மனம் உற்சாகமாக வரவேற்றாலும் கூடவே அழையா விருந்தாளியாக காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக கைகோத்துக்கொண்டு வந்து நம்மை பாடாய்ப்படுத்தும். இத்தகைய நேரத்தில் தொண்டைக்கு இதமும், உடலுக்கு ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடிய இந்த துளசி மூலிகை சூப் செய்து ரிலாக்ஸ் டைமில் பருகலாம்.
**எப்படி செய்வது?**
நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி ஒரு கப், துளசி இலைகள் ஒரு கைப்பிடி, இடித்த இஞ்சி ஒரு துண்டு, பூண்டு சிறிதளவு, உப்பு தேவையான அளவு ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் சிறிது சுண்டியதும் இறக்கவும். பின்னர் அதை மசித்து வடிகட்டி, சிறிதளவு பொடித்த சீரகம், மிளகு சேர்த்துப்பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி சூடாகப் பருகவும்.
**சிறப்பு**
மன அழுத்தத்தை உடனடியாகக் குறைக்கும். புத்துணர்ச்சியைத் தரும். காய்ச்சல் வருவது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக இந்தச் சூப் செய்து அருந்தலாம்.�,