ஒரே படத்தில் அறிமுகமாகும் மூன்று நட்சத்திர வாரிசுகள்!

Published On:

| By Balaji

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட திரையுலகையும், இந்தி சினிமாவையும் ஒப்பிடும்போது நடிகர், நடிகைகளின் வாரிசுகள் வருகை இந்தியில்தான் அதிகம் இருக்கிறது. அந்தவகையில் இந்தாண்டு மூன்று நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒரே படத்தில் அறிமுகமாக இருக்கின்றனர். பிரபல இயக்குநர் சோயா அக்தர் இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் மற்றும் ஷாருக் கானின் மகள் சுகானா கான் ஆகிய மூவரும்தான் இந்த நட்சத்திர வாரிசுகள். இந்தப் படம் சோயா அக்தர் எழுதி பிரபலமான ஆர்ச்சிஸ் காமிக்ஸை தழுவி திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share