3 இலங்கை கிரிக்கெட் வீரர்களிடம் ‘மேட்ச் -பிக்ஸிங்க்’ குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்போது விசாரித்து வருவதாக இலங்கை விளையாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கவுன்சில் (எஸ்.எல்.சி) தற்போது சர்வதேச தரத்தில் வீரர்களை உருவாக்கும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குமார் சங்ககரா, மகேலா ஜெயவர்தனே, முத்தையா முரளிதரன், சனத் ஜெயசூரியா போன்ற முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பின் நீண்டகாலமாக போராடி வருகின்றது இலங்கை அணி.
தற்போது இந்த விஷயங்களை மேலும் மோசமாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களை மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரித்து வருகிறது. இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் டல்லாஸ் அலகபெரும்மா சமீபத்தில் இது குறித்து பொதுவெளியில் கூறியுள்ளார். இந்த விஷயத்தின் இரகசியத்தன்மையை வைத்து, விசாரணையில் உள்ளவர்கள் முன்னாள் வீரர்களா அல்லது தற்போதைய கிரிக்கெட் வீரர்களா என்பதை டல்லாஸ் குறிப்பிடவில்லை. இது குறித்து வருத்தம் தெரிவித்த அவர், விளையாட்டு ஒழுக்கம் மற்றும் குணத்தின் தன்மையில் குறைந்துவிட்டதைக் கண்டு நாங்கள் வருந்துகிறோம்” என்று டல்லாஸ் கூறினார்.
இருப்பினும், இதில் தற்போது விளையாடும் வீரர்கள் யாரும் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. தனது வெளியீட்டில், “அமைச்சர் உண்மையில் குறிப்பிட்டது மூன்று முன்னாள் இலங்கை வீரர்களுக்கு எதிராக ஐ.சி.சி ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையைப் பற்றியது, தற்போதைய தேசிய வீரர்கள் அல்ல என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்காவை ஹெராயின் வைத்திருந்ததற்காக இலங்கை சட்ட அமலாக்க நிறுவனம் ஒரு வாரத்திற்கு முன்புதான் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”