cஇந்த வார ஓடிடி ரிலீஸ் புதுப் படங்கள்!

Published On:

| By Balaji

திரையரங்க ரிலீஸ் போல ஓடிடியில் நேரடியாக படங்கள் வெளியாவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரக்குகளில் முன்பு போல மக்கள் கூட்டம் வருவதில்லை. அதுவே விஜய், தனுஷ் மாதிரியான பெரிய ஹீரோஸ் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் கூட்டம் வருகிறது.

உதாரணமாக, விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான் மற்றும் தனுஷின் கர்ணன் படங்களுக்கு மட்டுமே திரையரங்கில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. மற்றபடி, சின்ன பட்ஜெட் படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால், பெரும்பாலான சின்ன பட்ஜெட் படங்கள் நேரடி ஓடிடி ரிலீஸ் அல்லது நேரடியாக டிவி வெளியீட்டுக்கு முன்னுரிமை கொடுத்துவருகிறார்கள்.

சமீபத்தில் கூட, நடிகர் கதிர் நடிப்பில் உருவான சர்பத் திரைப்படம் நேரடியாக கலர்ஸ் டிவியில் வெளியானது. அப்படி, இந்த வாரம் தமிழ் புத்தாண்டு சிறப்பாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது. என்னென்னப் படங்கள் இதோ…!

அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. இந்தப் படம் தயாராகி நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், சரியான ரிலீஸ் கிடைக்காமல் தள்ளிப் போனது. எதுக்கு வம்பு என ஓடிடியில் வெளியிட்டு விட்டார்கள். இப்படம், நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

குட்டி, உத்தமபுத்திரன், யாரடி நீ மோகினி படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகரும், இயக்குநருமான கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘மதில்’. தமிழகத்தில் அடிக்கடி நடக்கும் முக்கிய பிரச்னையை பேசுகிறது இப்படம். இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

தெலுங்கிலிருந்து புஜிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் திரையரங்கில் வெளியான படம் உப்பெண்ணா. என்ன ஸ்பெஷலென்றால், இந்த தெலுங்கு படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். நம்ம ஊரில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படம் மாதிரியான ஒரு களம். திரையரங்கில் ஏற்கெனவே வெளியாகிவிட்ட இந்தப் படமும் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. மாஸ்டரைத் தொடர்ந்து விஜய்சேதுபதியின் வில்லத்தனத்தை ரசிக்க விரும்பினால் உப்பென்னா பார்க்கலாம்.

ராசு ரஞ்சித் இயக்கி நடித்திருக்கும் படம் தீதும் நன்றும். ஈசன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய ரோலில் இப்படத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் திரையரங்குக்கு வந்த இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், டென்ட்கொட்டா எனும் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

**- தீரன் **

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share