nதியேட்டர்கள் திறப்பு :ரசிகர்கள் ஆரவாரம்!

entertainment

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா முழுவதும் மூடப்பட்ட தியேட்டர்களை அந்தந்த மாநிலங்களில் நோயின் பரவலை பொறுத்து அந்தந்த மாநில அரசு திறக்க அனுமதி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு திரையரங்கைத் திறக்க அனுமதி வழங்கவில்லை. ஆனால், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது

தெலுங்கில் இன்று வெளியான 5 புதிய திரைப்படங்களும், ஏற்கனவே வெளியான சில பழைய படங்களையும், சில ஆங்கில, ஹிந்திப் படங்களையும் திரையிட்டுள்ளார்கள். 50 சதவீத இருக்கைகளுடன் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதில் சில படங்களுக்கு 50 சதவீத இருக்கைகள் முழுமையாக நிரம்பியுள்ளது தெலுங்கு திரையுலகினரிடமும், திரையரங்க வட்டாரத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனித் தியேட்டர்களை விட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிக அளவில் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாவது அலை வரும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தாலும் தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்துவிட்டதைப் போல தமிழகத்திலும் திரையரங்கங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதிக்கும்பட்சத்தில் படங்களை வெளியிடுவது, தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் இடையே முடிவுக்கு வராமல் இருக்கும் பிரச்சினைகளில் சங்கத்தின் அணுகுமுறை பற்றி விவாதித்து முடிவு எடுக்கத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அவசர கூட்டம் இன்று இரவு 7 மணிக்குச் சென்னையில் நடைபெற உள்ளது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0