அமெரிக்காவின் விளம்பர பலகையில் தி ராக்கெட்ரி நம்பி எபெஃக்ட்!

Published On:

| By admin

இந்திய விண்வெளி ஆராய்ச்சி ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரும் விளம்பர பலகையாக கூறப்படும் டைம்ஸ் ஸ்கொயர் விளம்பரப் பலகையில் வெளியாகியுள்ளது. விஞ்ஞானி நம்பி நாரயணனாக நடித்து படத்தை இயக்கி தயாரிக்கிறார் மாதவன்.

ஏற்கனவே திராக்கெட்ரி நம்பி எஃபெக்ட் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சேகர் கபூர் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் படத்தை பற்றி பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது. படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக
மாதவன் மற்றும் அவரது குழுவினர் அமெரிக்கா முழுவதும் 12 நாள் விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

டெக்சாஸின் ஸ்டாஃபோர்ட் நகரம் ஜூன் 3 ஆம் தேதியை நம்பி நாராயணன் தினமாக அறிவித்துள்ளது.உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்டின் டிரைலர் ஜூன் 11 அன்று இரவு 8:45 மணி முதல் இரவு 9 மணி வரை ஒளிபரப்பட்டது.

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் டிரைலர் திரையிடப்பட்டது குறித்து ஆர்.மாதவன் கூறியிருப்பதாவது, “மிக மிக மிக விரைவில் நேரம் கடந்துவிட்டது. நேற்றுதான் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததைப் போல் உணர்கிறேன், இப்போது இதோ. படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலகின் மிகவும் விரும்பப்படும் விளம்பரப் பலகையில் டிரெய்லரை திரையிடுகிறோம். கடவுளின் கருணையுடன், இதுவரை நாங்கள் பெற்றுள்ள அனைத்து அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி.
ஜுலை 1 ஆம் தேதி உங்களை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம் விளம்பர பலகையில் டிரைலர் வெளியிடப்பட்ட போது மாதவனுடன் விஞ்ஞானி நம்பி நாராயணனும் கலந்துகொண்டார். இந்திய சினிமாவில் முக்கிய படைப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான், தமிழ் நடிகர் சூர்யா இருவரும் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளனர் முதல் முறையாக அமெரிக்காவின் மிகப் பெரிய விளம்பர பலகையில் தமிழ்பேசும் டிரைலர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share