தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் ஒன்றுக்கொன்று இணைந்தே செயல்பட்டு வருகிறது. இரண்டு மொழிப் படங்களுக்கும் பெரிய வித்தியாசங்களைப் பார்க்க முடியாது.
தமிழ் இயக்குனர்கள் தெலுங்கிலும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் இயக்கியிருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் சேகர் கம்முலா, வம்சி பைடிப்பள்ளி இருவரும் அடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார்கள்.
சேகர் – தனுஷ் கூட்டணி ,வம்சி – விஜய் கூட்டணியில் தயாரிக்கப்படவுள்ள படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுமே பான்-இந்தியா எனும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
கன்னட,தெலுங்கு ஹீரோக்கள்தான் பான்-இந்தியா எனும் கலாச்சாரத்தை தொடங்கிவைத்து நடித்து வருகிறார்கள். இதனால் நடிகர்களின் சம்பளம் அதிகமாக கிடைத்து வருகிறது
அதை தற்போது தனுஷ், விஜய் இருவரும் பின்பற்ற தொடங்கி உள்ளார்கள். ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானால் அதற்கு ஓடிடி உரிமையாக பெரும் விலை கிடைக்கின்றது
சிலரது படங்களுக்கு விலையை முடிவு செய்து படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே குறிப்பிட்ட தொகையை முன்பணமாக ஓடிடி நிறுவனங்கள் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கின்றனர்
இதனால் படத்தின் தயாரிப்பு செலவுக்கு முழுமையாக பைனான்சியர்களிடம் கடன் வாங்கி வட்டி கட்டும் சுமை குறைகிறது. அதனால்தான் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பான்-இந்தியா படங்களுக்கு திட்டமிடுகின்றனர் என கூறப்படுகிறது.
**-இராமானுஜம்**
�,