இந்திய சினிமாவின் முதல் விர்ச்சுவல் திரைப்படம்!

Published On:

| By admin

இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது முழுவதும் விர்ச்சுவல் முறையில் ஒரு படம் தயாராக இருக்கிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி விர்ச்சுவல் முறையில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகரும், இயக்குனருமான பிரித்விராஜ் நடிக்கிறார்.

மலையாளத்தில் உருவானாலும் அகில இந்திய படமாக இந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் ஒரே சமயத்தில் உருவாகிறது. இந்த படத்தை கோகுல்ராஜ் பாஸ்கர் என்பவர் இயக்குகிறார். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது என்றே தெரிகிறது.
**இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share