சிவா கதாநாயனாக நடித்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது.
2010-ஆம் ஆண்டு சிவா கதாநாயகனாக நடித்த ‘தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சி.எஸ்.அமுதன். தமிழ் சினிமாக்களை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி புதிய போஸ்டர் ஒன்றை படத்தின் இயக்குநர் சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
10 YEARS OF TAMIZH PADAM pic.twitter.com/pQeHlRVYJh
— CS Amudhan (@csamudhan) January 29, 2020
திரைப்படத்தைப் போன்றே, இந்தப் போஸ்டரிலும் வெளிப்படும் இயக்குநரின் குறும்புத்தனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாடுமுழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை தேவையில்லை’ என்பதைக் குறிக்கும் விதமாக ‘NO CAA, NO NPR, NO NRC’ என்று அந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. ஆனால் உற்று நோக்கும் போது தான் அதில் அடங்கியுள்ள சுவாரஸ்யம் தெரியவருகிறது.
NO CAA என்பதற்கு Cutout Atrocities by Agilaulaga Superstar என்றும், NO NPR என்பதற்கு Nonsensical Problem during Release எனவும், NO NRC என்பதற்கு Nadigar sangam Related Controversies என்றும் புதிய விரிவாக்கத்தைத் தந்துள்ளனர். அதாவது ‘கட்-அவுட் அட்டீழியங்கள் செய்யாத அகில உலக சூப்பர் ஸ்டார், வெளியீட்டின் போது அறிவில்லா தனமான பிரச்னைகள் தராத மற்றும் எந்தவிதமான நடிகர் சங்க பிரச்னைக்குள்ளும் சிக்காத’ என்று விவரித்துள்ளனர். மேலும் ‘Azaadi from Cliches’ எனக் குறிப்பிட்டு ‘கேட்டுக்கேட்டு பழகிப்போன விஷயங்களில் இருந்து விடுதலை’ என்று குறிப்பிட்டதோடு, அதைப் பின்பற்றும் விதமாக முற்றிலும் புதுமையான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த வித்தியாசமான போஸ்டர் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. தமிழ்ப்படம் வெளியாகியும், படத்தைத் தயாரித்த ‘ஒய் நாட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ஆரம்பித்தும் பத்து வருடங்கள் நிறைவு பெறுவதற்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
�,”