2019 தீபாவளி பண்டிகையின்போது விஜய் நடித்து வெளியான பிகில் படத்துடன் நேரடியாக மோதிய ஒரே படம் கைதி. ஏற்கனவே, கடைக்குட்டி சிங்கம் வெற்றி பெற்று, மார்கெட் ரேட்டில் உயரத் தொடங்கியிருந்த கார்த்திக்கு, கைதி திரைப்படத்தின் வெற்றி அவரது சினிமா வரலாற்றில் 100 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்த படமாக முத்திரை பதித்தது.
சினிமாவில் லாபகரமான பாக்ஸ் ஆபீஸ் ஹீரோவாக உயர்வது ரொம்ப ரொம்ப கஷ்டம். உச்சத்தை தொட்ட பின்னர் அதை தக்க வைப்பதற்கு கடுமையாக போராட வேண்டியிருக்கும். நவம்பர் மாதம் கைதி படத்தின் மூலம் 100 கோடி வியாபாரம் உள்ள ஹீரோவான நடிகர் கார்த்தி, அதே வேகத்தில் தம்பி படத்தின் மூலம் தரை கட்டிய கப்பலாக மாறியிருக்கிறார்.
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கைதி படத்தை, தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக எப்போது வந்தாலும் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் நடிகர் விஜய் நடித்த பிகில் வெளியான அன்று வெளியிட்டு வெற்றி பெறுவது சாதாரணமான காரியமல்ல. இதற்கு படத்தின் கதைக்களம் ரொம்ப முக்கியம் அதைவிட மார்க்கெட்டிங் ரொம்ப ரொம்ப முக்கியமானது. தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் தயாரித்து நேர்த்தியான மார்க்கெட்டிங் மூலம் அதனை வெற்றி பெற வைக்க முடியும் என்பதை அருவி, மான்ஸ்டர் படங்கள் மூலம் நிரூபித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் கைதி. அதனால் 100 கோடி ரூபாய் வியாபாரம், வசூல் என்பது சாத்தியமானது.
படம் தயாரிப்பதை விட அந்த படத்தை யாருக்கு வியாபாரம் செய்கிறோம்; அவர்களுக்கு அதனை மார்க்கெட்டிங் செய்கின்ற தகுதியும் புத்திசாலித்தனம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் தயாரிப்பாளர்களுக்கு தற்போது இருந்து வருகிறது. இதனை கவனத்தில் கொள்ளாமல் தம்பி படத்தை தமிழ் சினிமாவில் நேரடி அனுபவம் இல்லாமல் பணம் இருந்தால் எந்தப் படத்தையும் வாங்கி விடலாம் என்கிற மனநிலையில் நுழைந்தவர்களிடம் கொடுத்தது மிகப்பெரிய தவறாகப் போனது.
கைதி என்கிற விஸ்வரூப வெற்றியின் ஈரம் காய்வதற்குள் வெளியான தம்பி படத்திற்கு குறைந்தபட்ச ஓப்பனிங் கூட இல்லாத அளவிற்கு தமிழக உரிமை வாங்கிய நிறுவனம் தம்பி படத்திற்கான புரமோஷன் வேலைகளை செய்து இருக்கிறது. இதன் காரணமாக தம்பி படம் வசூல் ரீதியாக முதல்நாள் தமிழகத்தில்
2.75 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்தது. தம்பி படம் முதல் நாள் ஒரு கோடி ரூபாய் மொத்த வசூல் செய்வதற்கு மூச்சுத் திணறியது என்கிறது திரையரங்க வட்டாரம். முதல் மூன்று நாட்களில் சுமார் 3.75 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது தம்பி படம்.
-இராமானுஜம்.�,