தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் படம் ‘உப்பென்னா’. விஜய்சேதுபதி வில்லனாக இப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் அறிமுக நடிகராக பஞ்சா வைஷ்னவ் தேஜ் நடித்திருந்தார். நாயகியாக கீர்த்தி நடித்திருக்கிறார். படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கடந்த வருடம் வதந்தி ஒன்று பரவியது. என்னவென்றால், தெலுங்கில் உருவாகியிருக்கும் ‘உப்பென்னா’ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த செய்தி வெளியானதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது தான், தெலுங்கில் உப்பென்னா படத்தில் நடித்து முடித்திருந்தார் விஜய்சேதுபதி. அதனால், மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் உப்பென்னா கதையை விஜய்க்கு கூறியிருக்கிறார். நால்கொண்டாவில் நடந்த ஆணவக் கொலையை மையமாகக் கொண்டே இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட விஜய், மகன் சஞ்சய்யை இந்தப் படத்தின் மூலம் அறிமுகம் செய்யலாம் என திட்டமிட்டார்.
கொரோனாவினால் உப்பென்னா படமும் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி பெரிய வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுவருகிறது. ஏற்கெனவே அதிக ஆர்வம் காட்டிய இந்தப் படமானது வெளியாகியும் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதால், இந்தப் படத்தின் மூலம் மகன் சஞ்சய்யை அறிமுகம் செய்யலாமா என விஜய் யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
உப்பென்னா படத்தை அறிமுக இயக்குநர் பாபு சனா என்பவர் இயக்கிருக்கிறார். இவரே, தமிழ் ரீமேக்கையும் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. 2009ல் வெளியான வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் நடனமாடியிருப்பார் மகன் சஞ்சய். தற்பொழுது, கனடாவில் பிலிம் மேக்கிங் குறித்து படித்து முடித்திருக்கிறார். தந்தைக்கே மாஸான கதையுடன் ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருப்பதாக தகவலெல்லாம் வெளியானதும் நினைவு கூறத்தக்கது. விரைவில் விஜய் மகனை ஹீரோவாக திரையில் பார்க்கலாம் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.
– தீரன்�,