X‘நெஞ்சுக்கு நீதி’ டீஸர் அப்டேட்!

Published On:

| By admin

அனுபவ் சின்காவின் இயக்கத்திலும், தயாரிப்பிலும் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் “ஆர்டிகல் 15” . இந்தப் படம் ஒரு குற்றப் பின்னணியை வெளிப்படுத்தும் கதைக்களத்தை கொண்டதாகும். இந்திய அரசியலையமைப்பு சட்டம் என்னதான் அனைவரும் சமம் என்று கூறினாலும் இன்னமும் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் இந்திய மக்கள் பிளவுப்பட்டுக் கிடப்பதை இந்தப் படம் தத்ரூபமாக எடுத்துரைத்தது. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாக மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று இருந்த நிலையில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
“ஆர்டிகில் 15” என்று வெளியான இந்தத் திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி” என்று தமிழில் வெளியாக உள்ளது. இதைத் தமிழில் போனி கபூர் தயாரித்து, அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இதில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் குடியரசு தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், இன்னும் படத்தின் காட்சிகள் நிறைவடையாததையடுத்து படத்தின் வெளியீட்டை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். அதன்படி நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீஸர் இன்று (பிப்ரவரி 6) மாலை வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
**- வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share