3
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரைக் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை நடிகர் நட்டி நட்ராஜ் பகிர்ந்துள்ளார்.
இரண்டு வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரிஷி கபூர் நேற்று(ஏப்ரல் 30) இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்குகள் நேற்று மாலை 4 மணியளவில் மும்பையில் நடைபெற்றது. ரிஷி கபூரின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ஏராளமான திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகரும் பிரபல ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ், ரிஷி கபூரை நினைவு கூறும் விதமாக அவரைக் குறித்த சில தகவல்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,”லவ் ஆஜ் கல் என்ற திரைப்படத்திற்காக நான் வேலை செய்த போது ஒரு பார்ட்டிக்கு ரிஷிகபூர் என்னை அழைத்தார். அங்கு வந்திருந்த அவரது மனைவி என்னிடம் சரளமான தமிழில் உரையாற்றினார். இதைக் கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். அப்பொழுது ரிஷிகபூர் என்னிடம் இந்தி மட்டும் கற்றுக் கொண்டு ரீஜினலாக இருக்கக் கூடாது என்று கூறியதுடன் சென்னையைக் குறித்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
மேலும் ஏவிஎம் ஸ்டுடியோவும் வாணி ஸ்டுடியோவும் தனது இரண்டாவது வீடுகள் என்றும் அவர் தெரிவித்தார்” என நட்ராஜ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”