வசூல் செய்யுமா வலிமை?

Published On:

| By Balaji

சினிமா வியாபாரத்தில், திரையரங்குகள் வசூல், அதனை சார்ந்த சிறு, குறுந்தொழில்கள் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கான வருமானத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் திரைப்படங்கள் மூலம் சம்பாதிப்பது வழக்கம் அப்படித்தான் இந்த வருடம்

பொங்கலுக்கு முன்னதாகவே தங்கள் வருவாயை நோக்கி காத்திருந்தனர் திரையரங்க உரிமையாளர்கள்.

ஜனவரி 7 RRR, ஜனவரி 13 அன்று வலிமை, ராதேஷ்யாம் படங்கள் மூலம் சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பணம் புழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2021ஆம் ஆண்டின் கடைசி நாளில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக முதல் அபாய மணியை தமிழ்நாடு அரசு, அரசு ஆணைமூலம் அடித்தது. 100% இருக்கை அனுமதியை 50% ஆக குறைந்தது RRR, ராதேஷ்யாம் இரண்டு படங்களும் பட வெளியீட்டு தேதியை ஒத்திவைத்தனர்.

எது எப்படி இருந்தாலும் வந்தே தீருவேன் என நேற்றையதினம் வலிமை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் அறிவித்தார் . இன்றைய தினம் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு இன்று அறிவித்திருக்கிறது. திரைப்படம் பார்க்க கூடியவர்களில் 40% பேர் இரவு காட்சிக்குத்தான் வருவார்கள். ஒரு படத்தின் மொத்த பார்வையாளர்களில் 60% பேர் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் தியேட்டருக்கு வருவார்கள். இந்த இரண்டுக்கும் அரசு தடை விதித்துள்ளது.

வலிமை போன்ற படங்கள் 50% இருக்கை அனுமதியில் 50 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சி ஓடினாலே அசலை தேத்துவது கஷ்டம். இந்த சூழ்நிலையில் வாரத்தில் 13 காட்சிகள் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது, அரசு வழிகாட்டுதல் படி.

அதையும் கடந்து வலிமை படத்தை ரிலீஸ் செய்தால் அந்த படத்தில் நடிக்க அஜீத்குமார் வாங்கியுள்ள 50 கோடி ரூபாய் சம்பள தொகை பங்கு தொகையாக வசூல் மூலம் கிடைக்க 100 நாட்கள் அரங்கு நிறைந்த காட்சியாக வலிமை ஓட வேண்டும்

**-இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share