அயர்லாந்து சென்ற இந்திய அணி: இன்று டி20 கிரிக்கெட்!

Published On:

| By admin

இந்தியா – அயர்லாந்து இடையிலான டி20 ஆட்டங்கள் இன்றும் (ஜூன் 26), 28ஆம் தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி மும்பையில் இருந்து அயர்லாந்துக்குச் சென்றுள்ளது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. ஹர்த்திக் பாண்டியா தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாம் தர இந்திய அணி, இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
இந்தியா – அயர்லாந்து இடையிலான டி20 ஆட்டங்கள் இன்றும், 28ஆம் தேதியும் டப்ளின் நகரில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பயிற்சி கிரிக்கெட்டில் ஆடுவதால் அவர்களுக்கு பதிலாக அயர்லாந்து தொடரில் சூர்யகுமார், சஞ்சு சாம்சன் களம் இறங்குகிறார்கள். இந்தத் தொடருக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லட்சுமண் செயல்படுகிறார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel