]பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன்!

Published On:

| By Balaji

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியாகிப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இறுதிக் கட்டப்பணிகள் தொடங்க உள்ளது. இன்று படம் பற்றி தகவல்வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி படம் பிப்ரவரி 4ல் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. .

முன்னதாக இந்த படத்தைப் பொங்கல் வெளியீடாக வலிமை படத்துடன் களத்தில் சந்திக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வெளியாக உள்ளதால் அந்தப் படங்களுக்கு வழிவிட்டு பிப்ரவரியில் எதற்கும் துணிந்தவன் வெளியிடப்படுகிறது.

**-இராமானுஜம்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share