tஅசுரன் காம்போவுடன் சூர்யாவின் அடுத்த படம்!

Published On:

| By Balaji

அசுரன் படத்தின் வெற்றிக் காம்போவுடன் இணைந்து சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் அவர் நடிக்கவிருக்கும் நாற்பதாவது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த அசுரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படைப்பு ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அசுரன் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். தற்போது வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தையும் வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும், அதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்கவிருக்கும் இந்தத் திரைப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share