திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடியில் மட்டும் வெளியாகி கூட, சூர்யாவுக்கு ‘சூரரைப் போற்று’ பெரிய ஹிட். அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இவரின் 40வது படமாக இது உருவாக இருக்கிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது. பாண்டிராஜ் இயக்கிய ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ செம ஹிட் என்பதால், அதே ஸ்டைலில் இன்னொரு படத்தை கேட்டிருக்காம் சன்பிக்சர்ஸ்.
சூர்யாவுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் படத்தின் நாயகி. படத்தில் முக்கிய ரோலில் சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு துவங்கிவிட்டாலும், சூர்யா இன்னும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவில்லை. சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஓய்வில் இருக்கிறார் சூர்யா. விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.
சமீபத்தில் தகவல் ஒன்று கிடைத்தது. என்னவென்றால், 20 வருடம் கழித்து சூர்யாவுடன் இணைந்து நடிகர் ராஜ்கிரண் நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. நந்தா படத்துக்குப் பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், சூர்யாவுக்கு வில்லனாக பிரபல நடிகர் ஒப்பந்தமாகியிருக்காராம்.
சூர்யாவுக்கு வில்லனாக வினய் நடிக்க இருக்காராம். ஏற்கெனவே, விஷாலுக்கு வில்லனாக துப்பறிவாளன் படத்தில் நடித்தார். லேட்டஸ்டாக வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் வில்லன் ரோலில் சூர்யா படத்தில் தோன்ற இருக்கிறாராம்.
தற்பொழுது, தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு வெற்றிடம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்ய ஹீரோவிலிருந்து வில்லனாக புரோமோஷனாகியிருக்கிறார்.
சூர்யாவுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், சிவா இயக்கும் படங்கள் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
– ஆதினி�,