சூர்யாவின் 38-வது படமாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று வெளியானது. சூர்யாவின் 39வது படத்தை TJ ஞானவேல் இயக்கிவருகிறார். அசோக் செல்வன் நடித்த கூட்டத்தில் ஒருத்தன் படத்தை இயக்கியவர்.
சூர்யா 39-ல் வக்கீலாக சூர்யா நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் லீட் ரோல்களில் மணிகண்டன், ரஜிஷா விஜயன் நடித்திருக்கிறார்கள். சூர்யாவுக்கு அடுத்த ரிலீஸ் இதுதான்.
சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார். சூர்யாவுக்கு நாயகியாக ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். கிராமப் பின்புலம் கொண்ட ஆக்ஷன் கதையாக படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது.
சூர்யாவின் பிறந்த தினமான ஜூலை 23ஆம் தேதி இரண்டு சர்ப்ரைஸ்கள் சூர்யா ரசிகர்களுக்காகக் காத்திருக்கிறது.
ஒன்று, பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருக்கிறது. இந்தத் தகவலை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துவிட்டது.
இரண்டாவது சர்ப்ரைஸ், சூர்யா நடிக்கப் போகும் புதிய பட அறிவிப்பு. இயக்குநர் பாலா சூர்யாவை இயக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான அறிவிப்பு வெளியாக இருக்காம்.
சூர்யாவுக்கு சினிமாவில் மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர் பாலா. இவரின் நந்தா மற்றும் பிதாமகன் படத்தில் சூர்யா நடித்தார். இரண்டு படங்களுமே சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. மீண்டும், சூர்யா – பாலா கூட்டணி இணைகிறது. இதற்கான உறுதியான தகவலை, சூர்யாவின் பிறந்த தினத்தில் எதிர்பார்க்கலாம்.
பாண்டிராஜ் படத்தை முடித்த கையோடு, தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படமும், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சிவா இயக்கும் படமும் சூர்யாவுக்கு லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, சூர்யா பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருக்கிறது.
**- ஆதினி**
�,