wஒரே படத்தில் மூன்று வேடங்களில் சன்னி லியோன்

entertainment

சன்னி லியோன் நடிக்கும் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’ முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
திரையுலகில் வெகு சில படங்கள் மட்டுமே தயாரிப்பின் ஆரம்ப கட்டங்களில் இருந்தே, பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருக்கும். தலைப்பு படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் அந்த வகையில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ அதன் தொடக்கப் புள்ளியில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பெற்ற படைப்பாக இருந்து வருகிறது. மூன்று முக்கிய வேடங்களில் சன்னி லியோன் தோன்றுவது இதுவே முதன்முறை.
இந்தப் படம் அவர் ஏற்கனவே நடித்த திரைப்படங்களிலிருந்து வித்தியாசமானது. இந்தப் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர்கள் நேற்று மாலை (ஏப்ரல் 6) வெளியிட்டுள்ளனர்,
இந்தப் படத்தின் எழுத்தாளரும், இயக்குநருமான ஆர்.யுவன் கூறும்போது… “ஓ மை கோஸ்ட் படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா முழுவதும் பார்வையாளர்களிடமிருந்து அன்பான வரவேற்பைக் காண மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சன்னி லியோன் மேடத்தின் அர்ப்பணிப்புக்கு நன்றி. இந்தப் படத்துக்காக, அவர் தனது பாத்திரத்தைச் சிறப்பாக செய்ய வேண்டுமென பல ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டார். இது அவர் இதுவரை செய்ததில் இருந்து புதியது மற்றும் முற்றிலும் தனித்துவமானது என்று அவர் தீவிரமாக நம்பினார். OMG என்பது ஒரு வரலாற்று திகில் நகைச்சுவை கலந்த படம். இது முக்கியமாக பொழுதுபோக்கு மற்றும் ஹாரர் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான பொழுதுபோக்கு அனுபவமாக இருக்கும். இதில் சன்னி லியோன் பாத்திரத்துக்கு ஒரு வரலாற்று பின்னணி இருப்பதால், அவரது தோற்றம் முற்றிலும் கற்பனையைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது படத்துக்கு ஒரு சிறப்பு ஈர்ப்பாக இருக்கும்” என்றார்.
நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை ஆகியோருடன் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *