டாக்டரைத் தொடர்ந்து சுல்தான் ரிலீஸில் மாற்றமா?

Published On:

| By Balaji

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டாக்டர். அனிருத் இசையில் படத்திலிருந்து வெளியான ‘செல்லம்மா’, ‘நெஞ்சமே’, ‘சோ பேபி’ பாடல்கள் இணையத்தில் செம வைரல். சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாக இருந்தது. தேர்தல் காரணமாக படம் தள்ளிப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

டாக்டர் படத்தைத் தொடர்ந்து மிகப்பெரிய ரிலீஸ் கார்த்தியின் சுல்தான் படம் தான். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சுல்தான்’ வருகிற ஏப்ரல் 02ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலானது வருகிற ஏப்ரல் 06ஆம் தேதி நடக்க இருப்பதால் சுல்தான் பட ரிலீஸில் மாற்றம் ஏதும் இருக்குமா என கேள்விகள் எழுந்துள்ளது.

சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு படத்தினை ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருக்கிறாராம். எந்த மாற்றமும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. சமீபத்தில் படத்திற்கான தெலுங்கு திரையரங்க உரிமைக்கான விற்பனையை முடித்திருக்கிறார். அதோடு, தமிழகமெங்கும் நேரடியாக அவரே ரிலீஸ் செய்யவும் இருக்கிறார். அதோடு, டிஜிட்டல் ரைட்ஸ், டிவி உரிமை விற்பனை என சுல்தான் ரிலீஸூக்கு முன்பே விற்பனைகளை செய்துவிட்டார். அதனால், சுல்தான் ரிலீஸில் எந்த சிக்கலும் இருக்காது என்கிறார்கள்.

ஆக, சொன்னபடி கார்த்தியின் சுல்தான் நிச்சயம் திரையரங்கிற்கு வரும். தேர்தலன்று மட்டும் மாலை வரை திரையரங்குகள் இருக்காது. அன்றைய வசூல் போனாலும் பிரச்னையில்லை என்கிற முடிவில் இருக்கிறார்களாம்.

கார்த்தியுடன் நெப்போலியன், லால், யோகிபாபு, ஹரீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். கைதி படத்தில் பணியாற்றிய சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். விவேக் மெர்வின் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

– ஆதினி

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share