ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படங்களின் பட்டியலை மனதில் ஓட்டிப் பார்த்தால் முதலாவதாக வரும் பெயர் ஸ்பைடர் மேன். சிலந்தி கடித்து சிலந்தி மனிதனாக மாறும் நாயகன் வானத்தில் பறந்துக் கொண்டே செய்யும் சாகசமே அனைத்து ஸ்பைடர் மேன் படங்களின் ஒன்லைன்.
2002ல் முதல் ஸ்பைடர் மேன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்துக்கு ஏகபோக வரவேற்பு. ஆக்ஷன், சென்டிமெண்ட், வில்லத்தனம், காதல் என முழுமையான கமர்ஷியல் பேக்கேஜாக படம் பெரிய ஹிட். தொடர்ந்து மூன்று பாகங்கள் வரை வெளியானது. அதன்பிறகு, அமேசிங் ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 பாகங்கள் வெளியானது.
இவ்விரு பாகங்களுக்கும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, மார்வெல் நிறுவனம் 2K கிட்ஸ்களை ஈர்க்கும் வகையில் ஸ்பைடர் மேன் படத்தை புரட்டிப் போட்டது. அப்படி, 2017ல் ‘ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங்’ வெளியாகி பெரிய ஹிட். தொடர்ந்து, 2019ல் ஸ்பைடர் மேன் ; ஃபார் ஃப்ரம் ஹோம் படம் வெளியானது. மூன்றாவது பாகமாக ‘ ஸ்பைடர் மேன் ; நோ வே ஹோம்’ படம் இந்த வருட டிசம்பரில் வெளியாக இருக்கிறது.
வழக்கமான ஸ்பைடர் மேன் படங்களின் வரிசையிலிருந்து விலகி, புதிய களத்துடன் ஒரு அனிமேஷன் திரைப்படமொன்று கடந்த 2018ல் வெளியானது. அதுதான், ‘ஸ்பைடர் மேன்: இன் டு தி ஸ்பைடர் வெர்ஸ்’ (Spider-Man:Into the Spider-Verse). ‘யார்ரா இவனுங்க, இத்தனை ஸ்பைடர் மேன்களா’ என எக்கச்சக்க ஸ்பைடர் மேன்கள் நடிக்க குழந்தைகளுக்கான அட்டகாசமான ஒரு படமாக இது வெளியானது. அதோடு, ஆஸ்கரில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் வென்றது.
இந்தப் படத்துக்கான அடுத்தப் பாகத்துக்கான பணிகளைத் துவங்கிவிட்டது தயாரிப்பு நிறுவனமான சோனி. முதல் பாகத்தை மூன்று இயக்குநர்கள் இயக்கினார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. அனிமேஷன் படமென்பதால் கதை, திரைக்கதையில் ஒருவர் எக்ஸ்பெர்ட்டாக இருப்பார்கள். அதுமாதிரி, அனிமேஷன் எக்ஸ்பெர்ட்டில் தேர்ச்சியான ஒருவர் இயக்குநர் குழுவில் இருப்பார்கள். அப்படி, இரண்டுக்கு மேல் இயக்குநர் குழுவினர் இருப்பது படத்திற்கு நல்லதே.
ஆனால், இரண்டாம் பாகத்தில் டாஸ் சாண்டோஸ் மட்டுமே இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்கள். தற்பொழுது, இவருடன் இணைந்து ஜஸ்டின் கே.தாம்சன் மற்றும் கெம்ப் பவர் இருவரும் இணைந்து இயக்க இருக்கிறார்களாம். அனிமேஷன் படமென்பதால் ஸ்கிரிப்ட் மட்டும் ஒன்றாக இணைந்து பணியாற்றிவிட்டு, புரொடக்ஷன் வேலைகளைப் பிரித்து செய்வார்கள்.
முதல் பாகத்தில் வந்ததை விட, அதிகமான ஸ்பைடர் ஹீரோக்களை படத்துக்குள் கொண்டுவர இருக்கிறார்களாம். இதில், ஸ்பைடர் உமன் ஜெசிக்கா முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இந்த கேரக்டருக்கு நடிகை Issa Rae டப்பிங் பேச இருப்பதாகவும் தகவல்.
படத்தின் ரிலீஸ் எப்படியும் அடுத்த அவருடம் 2022 அக்டோபர் 7ஆம் தேதி என்று சொல்லப்படுகிறது.
**- ஆதினி **
.�,