2020 ஆம் வருடம் யாருக்கு நன்றாக அமைந்ததோ இல்லையோ, அமேசான் பிரைம் தனது சப்ஸ்கிரைபர்களைப் பெருக்கி, ஒரு நல்ல இடத்தை இந்தியாவில் பிடித்துவிட்டது. அதிலும், சூரியாவின் சூரரைப் போற்று- மாதவனின் மாரா ஆகிய இரண்டு படங்களையும் அக்டோபரில் ரிலீஸ் செய்வதன் மூலம் மேலுமொரு மிகப்பெரிய பாய்ச்சலை நடத்தவிருக்கிறது. அமேசானின் இந்தப் பாய்ச்சல் கோலிவுட்டில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலும் தான்.
மிகவும் எதிர்பார்க்கப்படும் 9 திரைப்படங்களை 5 இந்திய மொழிகளில் அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக டிஜிட்டல் தளத்தில் திரையிடுகிறது. வருண் தவான் மற்றும் சாரா அலி கான் நடித்த கூலி நம்பர் 1, ராஜ்குமார் ராவ் நடித்த சலாங், பூமி பெட்னேக்கரின் துர்காவதி, ஆனந்த் தேவரகொண்டா நடித்த மிடில் கிளாஸ் மெலடிஸ் (தெலுங்கு), மாதவன் நடித்த மாரா (தமிழ்), பீமா சேனா நளமகாராஜா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி (மலையாளம்). இந்த படங்கள் 2020 அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து தனது ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கும்.
அமேசானின் இந்த அக்டோபர் வேட்டையில் சூரரை போற்று அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாக இருக்கும் அதிரடிப்படம் சூரரை போற்று. சூர்யா கதாநாயகனாக நடிக்க அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல் மற்றும் மோகன் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை சூரியாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் குனீத் மோங்காவின் சீக்கியா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட “சிம்பிள் ஃப்ளை” புத்தகத்தின் கற்பனையான பதிப்பாகும். மாதவன் நடிக்கும் மாரா பிரைம் வீடியோவில் டிசம்பர் 17 ஆம் தேதி திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. திலீப் குமார் இயக்கத்தில் தமிழ் மொழி ரொமாண்டிக் டிராமாவாக இந்தப் படம் இருக்கும். பிரமோத் பிலிம்ஸின் ஸ்ருதி நல்லப்பா மற்றும் பிரதீக் சக்ரவர்த்தி ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தில் மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
-மதன்-�,