சோனு சூட்: ஒருபுறம் உதவி மறுபுறம் வரி ஏய்ப்பா?

entertainment

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள திரைப்பட துறையினர் தங்களால் முடிந்த அளவு பொதுமக்களுக்கான உதவிகளை அரசு, மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்தனர்.

தெலுங்கு, இந்தி, மலையாள மொழி திரைப்பட துறையில் தங்கள் துறைசார்ந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டது சில மாநிலங்களில் பொதுமக்களும் இதனால் பயன்பெற்றனர்.

இந்தி நடிகர் சோனு சூட் நிவாரண உதவிகளை நேரடியாகவே மேற்கொண்டார். சினிமாவில் கதாநாயகன் மேற்கொள்ளும் உதவிகள் போன்றே இவரது உதவி நடவடிக்கைகளும் இருந்தன.

டிராக்டர் வாங்கி கொடுப்பது, வெளிநாடுகளில் சிக்கி கொண்டவர்களை விமானம் மூலம் அழைத்து வருவது, கொரோனா முன் களப்பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்க தனது ஹோட்டலில் அறை ஒதுக்குவது போன்ற அதிரடி நடவடிக்கைகள் சினிமாவை காட்டிலும் அதிகமான புகழ் வெளிச்சம் இவர் மீது ஏற்பட காரணமானது. இந்த நற்பெயர் அனைத்தையும் சிதறடித்து இருக்கிறது ஒரே ஒரு வருமானவரி சோதனையும் அதனையொட்டி வெளியான அறிக்கையும்

நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசிப்பவர் சோனு சூட். இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உட்பட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மும்பை மற்றும் லக்னோவில் சோனு சூட் உடன் தொடர்புடைய ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த செப்டம்பர்15 ல் சோதனை நடத்தினர்.

‘ரியல் எஸ்டேட்’ தொழில் ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில்,

மும்பையை சேர்ந்த பிரபல நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களிலும், லக்னோவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மும்பை, லக்னோ, கான்பூர், ஜெய்ப்பூர், டெல்லி, குருகிராமில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

நடிகர் மற்றும் அவரது கூட்டாளிகளின் இடங்களில் நடந்த சோதனையின் போது, அவர்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை 20 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோனுசூட் போலியான நிறுவனங்களிடம் இருந்து போலியாக கடன் வாங்கி கணக்கில் வராத சொத்து சேர்த்து உள்ளார்” என்று கூறப்பட்டு உள்ளது.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0