மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுவர, அங்கிருக்கும் ஒருவர் மட்டும் அதனை மிக அசால்ட்டாக கையாள்கிறார் என்றால் அது மாளவிகா மோகனன் தான்.
லோகேஷின் கைதி திரைப்பட வில்லன் அர்ஜூன் மாஸ்டர் படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் ஷூட்டிங்குக்கு அவருடன் வந்த பூனையை எடுத்துக்கொண்டு விளையாடுவதையே முழுநேர வேலையாகக் கொண்டு ஷூட்டிங்குக்கு லேட்டாக செல்லும் அளவுக்கு மாளவிகா மிக இயல்பாக இருந்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை தயார்படுத்திக்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மாளவிகா, ஷூட்டிங் அல்லாத சமயங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் ஷூட்டிங்குக்காக தன்னை தயார் செய்துவருகிறார். இது தான் மாளவிகா ஸ்டைல் என்கின்றனர் அவரை அறிந்தவர்கள். நடிக்கவிருக்கும் காட்சிக்காக வீட்டிலேயே தயாராகிவிட்டால், ஷூட்டிங்கில் மிகவும் ரிலாக்ஸாக இருந்து நடிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தலாம் என்பது மாளவிகாவின் எண்ணம் என்கின்றனர். இதற்கு உதாரணமாக சமீபத்தில் மாளவிகா கலந்துகொண்ட ‘Parkhour Training’ஐ கூறுகின்றனர்.
Parkhour Training என்பது உடலை வளைத்து நெளித்து, சுவர்களின் மீது சுலபமாக ஏறுவதற்கும், பாதுகாப்பாக எகிறி குதிப்பது உள்ளிட்ட அனைத்து வகையான ஏரோபிக்ஸ் செயல்பாடுகளுக்கும் உடலை தயார் செய்யும் பயிற்சி முறையாகும். இதன்மூலம், உடலை எந்த வகையிலும் சுலபமாக திருப்பமுடியும். இந்தப் பயிற்சிக்கு மாளவிகா தொடர்ந்து செல்வதற்குக் காரணம், மாஸ்டர் படத்தில் அவருக்கு இருக்கும் ஆக்ஷன் காட்சிகள் தான் என்கின்றனர் படக்குழுவினர். மாளவிகாவிற்கும் மாஸ்டர் படத்தின் வில்லனான விஜய் சேதுபதிக்கும் இடையேயான ஆக்ஷன் காட்சிகளுக்காக இந்தப் பயிற்சியில் மாளவிகா ஈடுபட்டிருக்கிறார் என்கின்றனர்.�,