ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துக்குப் பின் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான டாக்டர்.
தற்போது சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’, ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படங்களில் நடித்து வருகிறார்
இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராஃபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டான் படமும் விரைவில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் 21ஆவது படம் தெலுங்கில் தயாரிக்கப்படுகிறது ‘ஜதி ரத்னலு’ எனும் சூப்பர் ஹிட் தெலுங்குப் படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார். இந்தப் படம் காமெடி, காதல் என ரொமாண்டிக் ஜானராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
படத்தின் கதை குறித்து இயக்குநர் வட்டாரத்தில் விசாரித்தபோது… “வெள்ளைக்காரப் பெண்ணை காதலித்து, கல்யாணம் செய்வது போன்ற கதைக்களமாம். அதனால், படத்துக்காக மதரஸா பட்டணம் படத்தில் அறிமுகமான எமி ஜாக்சன் மாதிரியான ஒரு வெள்ளைக்காரப் பெண் நடிகை அல்லது புதுமுகமாக இருந்தாலும் பரவாயில்லை எனத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம். ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கவிருப்பதால் கதாநாயகி தேடல் சர்வதேச அளவில் விரைவுப்படுத்தப்பட்டிருக்கிறது” என்கின்றனர்.
**-இராமானுஜம்**
�,