விஜய்க்கு ‘அரேபிக் குத்து’ எழுதும் சிவகார்த்திகேயன்!

Published On:

| By admin

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதால் படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

மேலும் படம் கோடை விடுமுறையை ஒட்டி வெளிவர இருக்கும் நிலையில் கடந்த மாதம் குடியரசு தினத்தை ஒட்டி 26ஆம் தேதி முதல் பாடல் வெளியாகும் என எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கொரோனா சூழல் மற்றும் படங்கள் தள்ளி வைப்பு உள்ளிட்ட காரணங்களால் அது நடக்காமல் போனது.

இப்போது தள்ளிப்போன அந்த ‘பீஸ்ட்’ பாடலுக்கான புரோமோதான் தற்போது வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் வரிகள் எழுத, பாடல் எழுதுவதற்கான உருவாக்கமாக இவர்கள் மூன்று பேரும் அனிருத் ஸ்டுடியோவில் சந்தித்து பேசும்படியான புரோமோ ‘டாக்டர்’ படத்தின் ‘செல்லம்மா’ பாடலுக்கான புரோமோ ஸ்டைலில் வந்திருக்கிறது.

அரபிக் குத்து ஸ்டைலில் உருவாகி இருக்கும் இந்த பாடல் இந்த மாதம் 14ஆம் தேதி காதலர் தினத்தை ஒட்டி வெளியாக இருக்கிறது.

இந்த புரோமோவின் இறுதியில் பாடல் உருவாகி இருப்பதை அனிருத் நெல்சன் சிவகார்த்திகேயன் மூவரும் விஜய்யிடம் சொல்வது போலவும், விஜய் இவர்களிடம் தொலைபேசியில் பேசுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

படப்பிடிப்பு முடிவடைந்து சென்சார் ஆனதும் சீக்கிரமே பட வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

**ஆதிரா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share