அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இவற்றில் எந்தப் படம் முதலில் வெளியாகும் என்பது இதுவரை முடிவாகவில்லை. அகில இந்தியப் படமாக தயாராகும் தெலுங்குப் படமொன்றில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை அனுதீப் இயக்குகின்றார், அதனை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படமொன்றில் நடிப்பது சம்பந்தமான அறிவிப்பு ஜனவரியில் வெளியானது.
இந்நிலையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை மாநாடு படத்தை இயக்கிய வெங்கட்பிரபு இயக்கவிருப்பதாக தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவான பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். தெலுங்கு படம் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார்கள்.
**இராமானுஜம்**